தேசிய முன்னேற்றத்திற்கான நவீன உள்கட்டமைப்பு திட்டங்கள் – பிரதமர் மோடி
நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு புதிய தலைமுறை உள்கட்டமைப்பு முயற்சிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேச வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் மேம்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, நாசிக் – சோலாப்பூர் – அகால்கோட் பகுதிகளை இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலையுடன் கூடிய பசுமை விரைவு நெடுஞ்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் பிரதமரின் ‘கதி சக்தி’ தேசியத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுவதால், பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்றும், மேற்கு முதல் கிழக்கு பகுதிகளுக்கிடையேயான போக்குவரத்து இணைப்பு மேலும் உறுதியாகும் என்றும் பிரதமர் விளக்கினார்.
இந்த நெடுஞ்சாலை திட்டம் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி, பிராந்திய வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.