டிசம்பர் மாதத்தில் புதிய சாதனையை பதிவு செய்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!
டிசம்பர் மாதத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
இந்தியாவில் மின்னணு பண பரிமாற்றம் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக UPI, RuPay போன்ற உள்நாட்டு கட்டண தளங்கள் மூலம் உலகத் தரத்திற்குச் சமமான வசதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகரும் இந்தியாவின் பயணத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
மேலும், கடந்த ஒரு ஆண்டில் மொத்தமாக 300 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு டிஜிட்டல் வழி பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.