2027 ஆகஸ்ட் முதல் புல்லட் ரயில் இயக்கம்
படுக்கை வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, கவுஹாத்தி – கொல்கத்தா வழித்தடத்தில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம் சுமார் 2,300 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புல்லட் ரயில் திட்டம் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பயணிகள் சேவையாக தொடங்கப்படும் எனவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.