போயஸ் கார்டன் இல்லம் முன்பு ரசிகர்கள் திரள் – ரஜினிகாந்திடம் புத்தாண்டு வாழ்த்து உற்சாகம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தின் முன் திரண்ட ரசிகர்களுக்கு அவர் நேரில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக அவரது இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.
அந்த நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், இரு கைகளையும் கூப்பி ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்கள் அன்புடன் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும் அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.