சீனாவை கலக்க வைத்த “Battle of Galwan” – சல்மான் கானின் புதிய படத்திற்கு உலக கவனம்

Date:

சீனாவை கலக்க வைத்த “Battle of Galwan” – சல்மான் கானின் புதிய படத்திற்கு உலக கவனம்

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள, நடிகர் சல்மான் கான் நடிப்பிலான Battle of Galwan திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் படம் உண்மைகளை திரித்துக் காட்டுவதாகக் கூறி சீனா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.

லடாக்கில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை மையமாக வைத்து Battle of Galwan திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு, எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா–சீனா இடையே நேரடி மோதல் எதுவும் நிகழாத நிலையில், 2020 ஆம் ஆண்டு இந்தப் பகுதி மீண்டும் உலக கவனத்திற்கு வந்தது.

2020 ஜூன் மாதத்தில் ஏற்பட்ட திடீர் மோதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில் முக்கியமானவர் 16 பீகார் ரெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரியான கர்னல் பிகுமல்ல சந்தோஷ் பாபு. அவர் வெளிப்படுத்திய துணிச்சலும் தியாகமும் மையமாக வைத்து இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கியவர் அபூர்வா லகியா.

கர்னல் சந்தோஷ் பாபுவின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். நடிகரின் பிறந்தநாளான டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட்ட டீசர், ரசிகர்களிடையே வேகமாக பரவி, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, சீன படையை எதிர்கொள்ள தயாராக கட்டையை கையில் பிடித்தபடி சல்மான் கான் நிற்கும் காட்சி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்தக் காட்சி, Game of Thrones தொடரில் வரும் ஜான் ஸ்னோ தனியொரு வீரனாக எதிரிகளை எதிர்கொள்ளும் காட்சியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அந்தத் தொடரின் பரபரப்பான காட்சிகளின் தாக்கம், Battle of Galwan டீசரிலும் தெளிவாகக் காணப்படுகிறது.

ஒருபுறம் இந்திய ரசிகர்கள் டீசரை கொண்டாடி வரும் நிலையில், மறுபுறம் சீனா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது. சீனாவின் முக்கிய ஆங்கில நாளிதழான The Global Times, இந்தத் திரைப்படம் கல்வான் மோதல் குறித்து தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை இந்திய படைகள் தான் முதலில் மீறியதாகவும், மோதலுக்குப் பொறுப்பு இந்தியாவுக்கே எனவும் அந்த நாளிதழ் விமர்சித்துள்ளது.

மேலும், இந்திய ராணுவ நடவடிக்கைகள் எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும், சீன வீரர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்ததாகவும் The Global Times குறிப்பிட்டுள்ளது. இந்தியா தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாகவும், உண்மைகள் மாற்றி சொல்லப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

“இந்திய படைகளே முதலில் எல்லையை கடந்தன. அதனால் சீன ராணுவம் சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில், Battle of Galwan படம் பகை உணர்வை தூண்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இது பதற்றத்தை அதிகரிக்கும் முயற்சி” என்றும் அந்த நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான துரந்தர் திரைப்படத்தை பார்த்து பாகிஸ்தான் விமர்சனம் செய்த நிலையில், தற்போது சீனாவும் Battle of Galwan குறித்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதுவும், முழுப் படம் வெளியாகும் முன், வெறும் டீசரை பார்த்தே இவ்வளவு கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், படம் முழுமையாக திரைக்கு வந்தால் மேலும் பெரிய எதிர்வினைகள் எழுவதில் ஆச்சரியம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருத்தணி தாக்குதல் சம்பவம்: தன்னிச்சையாக விசாரணை தொடங்க வேண்டும் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு பாஜக கோரிக்கை

திருத்தணி தாக்குதல் சம்பவம்: தன்னிச்சையாக விசாரணை தொடங்க வேண்டும் – தேசிய...

மாற்றங்களின் வேக ரயிலில் பயணிக்கும் இந்தியா – பிரதமர் மோடி உற்சாகம்

மாற்றங்களின் வேக ரயிலில் பயணிக்கும் இந்தியா – பிரதமர் மோடி உற்சாகம் இந்தியா...

பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் நாசச்செயல்கள் – அழிவின் விளிம்பில் இந்து பாரம்பரியச் சின்னங்கள்!

பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் நாசச்செயல்கள் – அழிவின் விளிம்பில் இந்து பாரம்பரியச்...

அரிசி வெளிநாட்டு விற்பனையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம்!

அரிசி வெளிநாட்டு விற்பனையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம்! இந்த ஆண்டில் அரிசி...