120 கிலோ மீட்டர் தூர இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் பினாகா ஏவுகணை – சோதனை வெற்றி!
ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பகுதியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பினாகா ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, நீண்ட தூரம் சென்று எதிரியின் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அமைப்புகளை வலுப்படுத்த இந்திய ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நீண்ட தூர தாக்குதல் திறன் கொண்ட பினாகா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாகவும், சோதனையின் போது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வெற்றிகரமான சோதனையை அடுத்து, டிஆர்டிஓ அமைப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.