வைகுண்ட ஏகாதசி விழா – திருப்பதி திருமலையில் பரமபத வாசல் திறப்பு விமரிசை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, உலகளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை ஸ்ரீவேங்கடாசலபதி கோயிலில் அதிகாலை பரமபத வாசல் திறப்பு நிகழ்வு மிகுந்த விமரிசையுடன் நடைபெற்றது.
பரமபத வாசல் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த வாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அப்போது “கோவிந்தா… கோவிந்தா…” என்ற பக்தி முழக்கங்கள் மலையெங்கும் எதிரொலித்தன.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார். தொடர்ந்து ரங்கநாயக்க மண்டபத்தில் அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க மரியாதைகள் வழங்கப்பட்டு, ஆசீர்வாதப் பிரதாங்கள் அளிக்கப்பட்டன.