வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமராகவும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவராகவும் இருந்த கலிதா ஜியா, இதய கோளாறு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு மூத்த மருத்துவர்களின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கலிதா ஜியா உயிரிழந்தார். அவரது மறைவு கட்சியினரும் ஆதரவாளர்களும் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கலிதா ஜியாவின் மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான நட்புறவுகளை வலுப்படுத்த அவர் முக்கிய பங்களிப்பு செய்தவர் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.