வியட்நாம் எல்லைப் பகுதிகளில் ரோபோக்களை பணியமர்த்தும் சீனா?
வியட்நாமுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைப் பகுதிகளில் காவல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக மனித உருவ ரோபோக்களை பயன்படுத்த சீனா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘வாக்கர் S2’ என அழைக்கப்படும் இந்த ரோபோ, கைகள், கால்கள் மற்றும் உடல் அமைப்புடன் கூடிய முழுமையான மனித வடிவமைப்பைக் கொண்டதாகும்.
மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் மனிதர்களுடன் இணைந்து செயல்படும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த ரோபோக்கள் தன்னிச்சையாக தங்களது பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் வசதியையும், 125 டிகிரி வரை உடல் வளைந்து இயங்கும் திறனையும், 15 கிலோ எடை வரை தூக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.