ஐ.என்.எஸ். அரிகாட் மூலம் ஏவுகணை சோதனை – முழு வெற்றி
அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட கே–4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள விசாகப்பட்டினம் கடற்பகுதியில், அணுசக்தி இயக்கம் கொண்ட ஐ.என்.எஸ். அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கே–4 வகை பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த ஏவுகணை, 3,500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் ஆற்றலைக் கொண்டதாகும். இதன் மூலம் இந்தியாவின் கடல் வழி அணுசக்தி தாக்குதல் திறன் மேலும் வலுப்பெற்றுள்ளது.
நீருக்கடியில் இருந்து ஏவுவதற்கேற்ற வகையில் கே–4 ஏவுகணையின் ஏவுதள அமைப்புகள் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதன் முக்கிய அம்சமாக, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் இந்த கே–4 ஏவுகணை சுமார் இரண்டரை டன் எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் பெற்றுள்ளது.