வங்கதேச நிலவரத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம்
வங்கதேசத்தில் இந்து சமூகத்தினருக்கு எதிராக நிகழ்ந்த கொலைச் சம்பவங்களை கண்டித்து, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரமாக உள்ள தொழில்கள் சேதப்படுத்தப்படுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், இந்து சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கூட்டமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.
இந்த சூழலில், அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் அமைந்துள்ள வங்கதேச தூதரக அதிகாரியின் அலுவலகத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டு, வங்கதேச அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.