2025ல் சவுதி அரேபியாவில் இருந்து 11,000 இந்தியர்கள் மீட்பு!
2025ஆம் ஆண்டில் அதிகமான இந்தியர்கள் சவுதி அரேபியாவிலிருந்து மீட்புப் பணிக்கு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அறிவித்துள்ளது.
விசா காலாவதியான நிலை, தேவையான ஆவணங்கள் இல்லாமல் தங்கல் போன்ற காரணங்களால் போலீசாரிடம் பிடிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
இந்த ஆண்டில் சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு 11,000 பேர் மீட்புப் பணியிலிருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், பட்டியலில் இரண்டாம் இடத்தில் அமெரிக்காவிலிருந்து 3,800 பேர் மீட்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.