சிறு தொழில் கடன் வழங்கலில் பின்னடைவடைந்த பொதுத்துறை வங்கிகள்
இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதில், தனியார் வங்கிகள் தொடர்ந்து முன்னணியில் இருப்பதாக வெளியான ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த ஆய்வின் தகவலின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் விவகாரத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு மெதுவாகக் குறைந்து வருகிறது.
2023ஆம் ஆண்டில் 39.3 சதவீதமாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு, தற்போது 37.8 சதவீதமாக சரிந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் இழந்த இந்த சந்தைப் பகுதியை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
குறிப்பாக, தனிநபர் சொந்தமான சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில், இந்நிதி நிறுவனங்களின் பங்கு தற்போது 41 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.