தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
4-வது தெற்கு ஆசிய கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் வரும் அக்டோபர் 24 முதல் 26 வரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 86 தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட தேசிய அணி பங்கேற்கிறது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம்பிடித்துள்ளனர்.
ஆண்கள் பிரிவில்:
- மானவ் (110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்)
- ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல்)
- தினேஷ் (மும்முறை தாண்டுதல்)
- தமிழரசு (4×100 மீட்டர் ரிலே)
- சரண் (4×100 மீட்டர் ரிலே)
பெண்கள் பிரிவில்:
- ஒலிம்பா ஸ்டாபி (400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 4×100 மீட்டர் ரிலே)
- நந்தினி (100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்)
- கோபிகா (உயரம் தாண்டுதல்)
- பவானி யாதவ் (மும்முறை தாண்டுதல்)
- சுபா தர்ஷினி (4×100 மீட்டர் ரிலே)
இந்த 10 வீரர், வீராங்கனைகள் தமிழ்நாட்டின் திறமையை சர்வதேச அளவில் வெளிப்படுத்தவுள்ளனர்.