அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பக்தர்களால் கோலாகலம்
தமிழ்நாடு–கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் திருக்கோயிலில் மார்கழி மாத பெருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் நடைபெறும் மார்கழி மகோற்சவம் கடந்த 17ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் திருத்தேரோட்டம், பாரம்பரிய சடங்குகளுடன் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது, தேரின் முன்னிலையில் கருப்பன் துள்ளல் எனப்படும் பாரம்பரிய ஆடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தர்ம சாஸ்தா ஐயப்பனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.