சைபர் தாக்குதல் தாக்கம் – பாரிஸில் அஞ்சல், வங்கி சேவைகள் முடக்கம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்ற சைபர் தாக்குதல்களால் அஞ்சல் சேவைகளும் வங்கி தொடர்பான பணிகளும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானனர்.
ஐரோப்பிய நாடான பிரான்சில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பரபரப்பான சூழ்நிலையில், தேசிய அஞ்சல் நிறுவனமான ‘லா போஸ்ட்’ மற்றும் அதனுடன் செயல்படும் வங்கி சேவையான ‘லா பேங்க் போஸ்டல்’ ஆகியவற்றின் இணைய வழி சேவைகள் தற்காலிகமாக செயலிழந்தன.
இதன் விளைவாக, பார்சல்கள் அனுப்புதல், பெறுதல் உள்ளிட்ட அஞ்சல் பணிகளில் தாமதம் ஏற்பட்டதுடன், பல சேவைகள் முழுமையாக முடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சைபர் தாக்குதலால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும், இது இணையதள சர்வர்களை இலக்காகக் கொண்டு சேவைகளைப் பயன்படுத்த முடியாதபடி செய்யும் ஒரு வகையான தாக்குதல் என்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.