கேரளத்தில் மீண்டும் பறவை இன்ஃப்ளூயன்சா – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
கேரள மாநிலத்தில் மீண்டும் பறவை இன்ஃப்ளூயன்சா நோய் பரவல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆழப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் பரவலின் அளவு மற்றும் தீவிரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், கோழி இறைச்சி பயன்பாட்டிற்கு தற்போது வரை எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை.
அவசர நிலை ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட கோழிகளை பறிமுதல் செய்து அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கேரள கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இந்த நோய் பரவியதால், கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.