பாபா ராம்தேவ் – பத்திரிகையாளருடன் மோதல்!
யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில் ஒரு செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி நடத்துனர் ஜெய்தீப் கர்னிக் அவரிடம் மல்யுத்தத்திற்கு வர சவால் விடுத்தார்.
ஜெய்தீப் சவாலை ஏற்று ராம்தேவ் அவருடன் போட்டியிட்டார். தொடக்கத்தில் ராம்தேவ் ஆதிக்கம் செலுத்தினாலும், ஜெய்தீப் எதிர்வினையாக அதிரடி காட்டி வெற்றி பெற்றார்.
போட்டி முடிந்த பின்னர் இருவரும் சிரித்தபடியே கைகுலுக்கிக் தோழமையுடன் நிகழ்ச்சியை முடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.