பிரதமர் மோடியுடன் நியூசிலாந்து பிரதமர் தொலைபேசி உரையாடல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள கிறிஸ்டோபர் லக்ஸன், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்கவரி 95 சதவீதம் வரை குறைக்கப்பட்டதாகவும், சில பொருட்களுக்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தின் விளைவாக, வருங்கால 20 ஆண்டுகளில் நியூசிலாந்தின் ஏற்றுமதி வர்த்தகம் 9,863 கோடி ரூபாயிலிருந்து 11,650 கோடி ரூபாய் வரை உயரக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.