ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – மூன்றாம் நாள் உற்சவம் கோலாகலம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த 20ஆம் தேதி மிகுந்த பக்தி மற்றும் கோலாகலத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் மூன்றாம் நாளான இன்று, நம்பெருமாள் அஜந்தா சௌரிக் கொண்டை அலங்காரத்துடன், அழகிய ஆபரணங்கள் சூடியும், தாமரை நிற பட்டாடை அணிந்தும் அர்ஜீன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
பின்னர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இணைந்து எழுந்தருளிய நம்பெருமாளுக்கு மகாதீபாராதனை சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வைக் காண திரளான பக்தர்கள் கோயிலில் திரண்டுவந்து சாமி தரிசனம் செய்தனர்.