குளிர்ச்சியில் உறையும் சவுதி அரேபியா – காலநிலை மாற்றம் ஒலிக்கும் அபாய சங்கு!

Date:

குளிர்ச்சியில் உறையும் சவுதி அரேபியா – காலநிலை மாற்றம் ஒலிக்கும் அபாய சங்கு!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சவுதி அரேபியாவில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்த அபூர்வமான நிகழ்வுக்குப் பின்னணி என்ன? விஞ்ஞானிகள் இதை எவ்வாறு விளக்குகிறார்கள்? விரிவாக பார்க்கலாம்.

எங்கும் பார்வை எட்டும் தூரம் முழுவதும் வெண்மையாகப் பரவிய உறைபனி. சாலைகள், வாகனங்கள், வீடுகள் என அனைத்தையும் மூடிய பனிக்கவசம். இந்த காட்சியை பார்த்தால் காஷ்மீர் அல்லது ஐரோப்பிய நாடுகள் என்று நினைத்துவிடலாம். ஆனால் இது வெப்பமான பாலைவன நாடாக அறியப்படும் சவுதி அரேபியா.

சவுதி அரேபியா என்றால் கடுமையான வெயிலும், நீடித்த வறட்சியும்தான் பொதுவான அடையாளம். ஆனால் அந்த நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றும் வகையில், தற்போது பனிப்பொழியும் பிரதேசமாக சவுதி மாறியுள்ளது. நாட்டின் வெப்பநிலை திடீரென கடுமையாக குறையும் என தேசிய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவிப்பின்படியே, நியோம் பகுதியில் அமைந்துள்ள ட்ரோஜெனா உயர்நிலப்பகுதிகளிலும், தபுக் மாகாணத்திலும் வெப்பநிலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது.

அடுத்தடுத்த நாட்களில் ஜபல் அல்-லாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமான பனிப்பொழிவு ஏற்பட்டது. பின்னர், பல இடங்களில் பூஜ்ஜிய டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை பதிவாகி, பனி பெய்யத் தொடங்கியது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், அல்உலா மாவட்டம், ஷக்ரா போன்ற பகுதிகளில் மழையும் பெய்தது. குறிப்பாக, சவுதியின் மேற்கு பகுதியில் உள்ள துவைக் மலைத்தொடரிலிருந்து ரியாத் வரையிலான பாலைவனப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு தொடர்கிறது.

சில இடங்களில் பனிச்சறுக்கு விளையாடும் அளவிற்கு தடித்த உறைபனி காணப்படுகிறது. ஆண்டுதோறும் வெப்பத்தையே அனுபவித்து வந்த சவுதி மக்கள், இந்த திடீர் குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பனிப்பொழியும் பகுதிகளுக்கு குடும்பமாகச் சென்று பொழுதைக் கழித்து வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு தீவிரமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், காலநிலை ஆய்வாளர்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த தேசிய வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்-கஹ்தானி, சவுதியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் திடீரென மிகவும் குளிர்ந்த காற்று புகுந்ததே இந்த அபூர்வ நிகழ்வுக்குக் காரணம் என தெரிவித்தார்.

இவ்வாறு வழக்கத்திற்கு மாறாக குளிர்காற்று வீசியதற்குக் காரணம் உலகளாவிய காலநிலை மாற்றமே என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது ஒரு சாதாரண இயற்கை மாற்றம் அல்ல; எளிதில் புறக்கணிக்க முடியாத அபாய எச்சரிக்கை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சமீப காலங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமேசான் காடுகள் தற்போது ஆக்சிஜன் வழங்குவதற்குப் பதிலாக கார்பன் டைஆக்சைடை வெளியிடுகின்றன என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும், சாதாரணமாக குளிர்ச்சியாக இருக்க வேண்டிய கடற்பரப்புகளில் வெப்பநிலை அதிகரித்ததால்தான் டிட்வா உள்ளிட்ட புயல்கள் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய இயற்கையின் தலைகீழ் மாற்றங்களின் தொடர்ச்சியாகவே, தற்போது சவுதி அரேபியாவிலும் இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் ஒருமித்தமாக கூறுவது ஒன்றுதான் —

“இது காலநிலை மாற்றம் அடிக்கும் இன்னொரு அபாய மணி!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உக்ரைனில் இந்திய போர் கைதி: ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்ட குஜராத் மாணவரின் பின்னணி

உக்ரைனில் இந்திய போர் கைதி: ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்ட குஜராத்...

ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் நடத்திய முப்பெரும் விழா

ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் நடத்திய முப்பெரும் விழா திருப்பத்தூரில் ஜம்பு மகரிஷி...

சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார்

சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார் திருவண்ணாமலை...

ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர்

ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர் அரக்கோணம் அருகே,...