காஷ்மீரில் ‘சில்லய் கலான்’ பனிப்பொழிவு பருவம் தொடக்கம் – போக்குவரத்து பாதிப்பு
காஷ்மீரில் ஆண்டுதோறும் நிலவும் ‘சில்லய் கலான்’ எனப்படும் கடும் பனிப்பொழிவு பருவம் தொடங்கியுள்ள நிலையில், பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஜம்மு–காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதேவேளை, பாரமுல்லா, குல்மார்க் மற்றும் சோனமார்க் பகுதிகளில் கனமான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதுவே தொடர்ந்து 40 நாட்கள் கடுமையான குளிர் நிலவும் ‘சில்லய் கலான்’ காலத்தின் ஆரம்பம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பொழிவின் காரணமாக சாலைகள் வழுக்கும் நிலையில் மாறியதால், பாதுகாப்பு கருதி பல முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.