ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளார்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக, 125 நாட்கள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி வழங்கும் நோக்கில் ஜி ராம் ஜி திட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஜி ராம் ஜி திட்டம் சட்டமாக அமலுக்கு வருகிறது.