மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் பணியிலிருந்த பரிசோதகர் திடீர் மரணம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தில் பணியாற்றி வந்த டிக்கெட் பரிசோதகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்தில் பரிசோதகராக பணியாற்றி வந்த விஜயன், பயணிகளின் பயணச்சீட்டுகளை சரிபார்த்து வந்துள்ளார்.
பேருந்து ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.