புதிய பாதையில் முன்னேறும் இந்திய ஏற்றுமதி துறை…!

Date:

புதிய பாதையில் முன்னேறும் இந்திய ஏற்றுமதி துறை…!

அமெரிக்கா விதித்துள்ள கடுமையான இறக்குமதி வரிகள் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி துறைகள் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஓமன் நாட்டுடன் இந்தியா மேற்கொண்டுள்ள முழுமையான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA), இந்தியப் பொருட்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வர்த்தக மற்றும் பொருளாதார செல்வாக்கை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிகப்படியான இறக்குமதி வரிகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டதால், அமெரிக்க சந்தையில் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்து போட்டித்திறன் குறைந்துள்ளது. குறிப்பாக ஆடைத்தொழில், வாகன உதிரிப்பாகங்கள், உலோகப் பொருட்கள் போன்ற மனித உழைப்பை அதிகம் சார்ந்த துறைகள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன.

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை முன்வைத்து, உக்ரைன் போரில் இந்தியா ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு வழங்குவதாகக் குற்றம் சாட்டி அமெரிக்கா இந்த கூடுதல் வரிகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்க சந்தைக்கு மாற்றாக புதிய நாடுகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்தப் பின்னணியில், ஓமனுடன் கையெழுத்தான CEPA ஒப்பந்தம் இந்தியாவுக்கு ஒரு முக்கிய மாற்றுத் தீர்வாக அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய ஓமன் அரசுப் பயணத்தின் போது, மஸ்கட் நகரில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் ஏற்பட்டுள்ள திசைமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவிலிருந்து ஓமனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 98 சதவீதத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் நகை, ரத்தினங்கள், துணி, தோல் பொருட்கள், காலணிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் நேரடியாக லாபம் அடையவுள்ளன. முன்பு 5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டிருந்த பல பொருட்கள் தற்போது எந்த வரியும் இன்றி ஓமன் சந்தையை அடைய முடியும். அதே நேரத்தில், இந்தியாவும் ஓமனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 78 சதவீதத்திற்கு வரிக் குறைப்பு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

பேரீச்சம்பழம், மார்பிள் கற்கள், பெட்ரோ ரசாயனப் பொருட்கள் போன்ற சில குறிப்பிட்ட தயாரிப்புகள் மட்டும், நிர்ணயிக்கப்பட்ட அளவு வரை குறைந்த வரியில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த வரம்பை மீறும் இறக்குமதிகளுக்கு வழக்கமான வரிகள் விதிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தொழில்துறையினரும் விவசாயிகளும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவார்கள் என அரசு விளக்கியுள்ளது. மேலும் பால் பொருட்கள், தேயிலை, காப்பி, தங்கம், வெள்ளி போன்றவை இந்த ஒப்பந்தத்தின் வரம்புக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கு எந்தவித வரிவிலக்கும் வழங்கப்படாது.

இந்த CEPA ஒப்பந்தம் பொருட்கள் வர்த்தகத்திற்கே அல்லாமல், சேவைத் துறையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொழில்முறை ஆலோசனை சேவைகள், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கு 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டு அனுமதி கிடைத்துள்ளது. மேலும் திறமையான இந்திய நிபுணர்கள் ஓமனில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கான நடைமுறைகளும் இலகுவாக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தியா – ஓமன் இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு ஆண்டுக்கு சுமார் 10.5 பில்லியன் டாலராக உள்ளது. ஓமனில் சுமார் 7 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களால் ஆண்டுதோறும் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிற்கு பணப்பரிவர்த்தனை இந்தியாவுக்கு கிடைக்கிறது. இத்தகைய சூழலில், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமலுக்கு வரவுள்ள இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மேற்கு ஆசிய பொருளாதார மற்றும் மூலோபாய நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதியில் குடும்பத்துடன் விஷமருந்தி நால்வர் உயிரிழப்பு

ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதியில் குடும்பத்துடன் விஷமருந்தி நால்வர் உயிரிழப்பு திருச்சி...

திருவள்ளூர் : எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்

திருவள்ளூர் : எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

முதல்வர் பதவியில் தொடர்வது உறுதி – சித்தராமையா அறிவிப்பு

முதல்வர் பதவியில் தொடர்வது உறுதி – சித்தராமையா அறிவிப்பு கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகத்...

எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதற்குமான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதற்குமான...