பேருந்தில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மாணவர்கள் – வைரலான காட்சிகள்
சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்தில், மாணவர்கள் மிக ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகரில் போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற புகார் நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கி சென்ற மாநகர பேருந்தில், இடமின்மையால் மாணவர்கள் கதவுகளிலும் படிக்கட்டுகளிலும் தொங்கியபடியே பயணித்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய மாநகர போக்குவரத்துக் கழகமும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற அபாயகரமான சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.