மீண்டும் தன்னலப் புகழ்ச்சி – உண்மையற்ற கூற்றுகளை முன்வைக்கும் ட்ரம்ப்!

Date:

மீண்டும் தன்னலப் புகழ்ச்சி – உண்மையற்ற கூற்றுகளை முன்வைக்கும் ட்ரம்ப்!

பதவியேற்ற பத்து மாதங்களுக்குள் எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாக மீண்டும் தன்னைப் புகழ்ந்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தன்னுக்குப் பிடித்தமான சொல் “TARIFF” எனவும் கூறியுள்ளார். இதன் பின்னணியை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கடந்த 17ஆம் தேதி நாட்டுமக்களுக்கு உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களின் சேவையையும் தியாகத்தையும் போற்றும் விதமாக, கிறிஸ்துமஸ் பரிசாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். அமெரிக்கா உருவான 1776ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு தகுதி பெற்ற ராணுவ வீரருக்கும் 1,776 டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் ரூபாய், “Warrior Dividend” என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அந்த தொகை வீரர்களின் கணக்குகளில் சேர்க்கப்படும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். வெளிநாடுகள் மீது விதிக்கப்பட்ட சுங்க வரிகளிலும், ஜூலை 4ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட “Big Beautiful Bill” என அழைக்கப்படும் புதிய பட்ஜெட் மசோதாவிலும் இருந்து இந்த நிதி திரட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 20 நிமிடங்கள் நீடித்த தனது உரையில், பெரும்பகுதியை தனது பொருளாதார சாதனைகளை விளக்குவதற்காகவே ட்ரம்ப் செலவிட்டார். அந்த உரையில் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பெயரை ஏழு முறை குறிப்பிடும் வகையில் விமர்சித்த அவர், வீழ்ச்சியடைந்திருந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுத்தது தானே எனக் கூறினார்.

மேலும், முந்தைய அதிபர்களின் புகைப்படங்களுடன் அவர்களின் தோல்விகளை சுட்டிக்காட்டும் காட்சிகளையும் மேடையில் காட்டிய ட்ரம்ப், அமெரிக்காவின் பழைய வலிமையை தன்னால் மீட்டெடுக்க முடிந்ததாக வலியுறுத்தினார். பதவிக்கு வந்த பத்து மாதங்களில் எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அழித்ததாகவும், காசா போரை நிறுத்தி, 3,000 ஆண்டுகளில் முதன்முறையாக மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியதாகவும், ஹமாஸிடம் இருந்த பணயக்கைதிகளை உயிரோடும் உடலோடும் மீட்டதாகவும் அவர் கூறினார்.

ஆனால், அமெரிக்க பொருளாதாரத்தை ட்ரம்ப் கையாளும் விதத்திற்கு வெறும் 33 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிபரின் மக்கள் செல்வாக்கு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வும் பணவீக்கமும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பொருளாதார பின்னடைவுகளுக்கு தெளிவான விளக்கம் எதையும் அளிக்காத ட்ரம்ப், கனடா, மெக்சிகோ, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது விதித்த சுங்க வரிகளே அமெரிக்க வளர்ச்சிக்கு துணைநின்றதாகக் கூறியுள்ளார்.

மேலும், 2026ஆம் ஆண்டுக்கான தனது நிர்வாக செயல்திட்டத்தையும் முன்வைத்த ட்ரம்ப், உலகமே பொறாமைப்படும் வகையில், குடிமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முழுமையாக ஆதரவளிக்கும், தன் அடையாளத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு அமெரிக்காவை உலகம் பார்க்க வேண்டும் என உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு திருப்பரங்குன்றம் தீபத்தூண்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர்...

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மது, மாது, ஊழல் –...

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ பதில் அதிர்ச்சி

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ...