சொத்து பிரச்சினை: செய்யாறு பகுதியில் தந்தையை கொன்ற மகன் போலீசார் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகிலுள்ள பகுதியில், சொத்து விவகாரத்தை காரணமாகக் கொண்டு தந்தையை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முருகத்தாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசெந்தில் என்பவர், தனது முதிய தந்தை மண்ணுவிடம் நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்று பணமாக வழங்க வேண்டும் எனக் கோரி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாலசெந்தில், மீண்டும் தந்தையுடன் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி, தந்தை மண்ணுவை மூச்சுத்திணறச் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பாலசெந்திலை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.