உயிர் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் ஊராட்சி தலைவர் பொறுப்பு – பெண் அளித்த புகார்
தனக்கு ஏதேனும் உயிர் அபாயம் நேர்ந்தால் அதற்கு சிறுகளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரே முழுப் பொறுப்பு எனக் கூறி, ஒரு பெண் காவல்துறையில் மனு அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் அருகிலுள்ள சிறுகளத்தூரில் வசித்து வரும் ஜூடி ஜெயந்தி என்பவர், கணவரை இழந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சிறுகளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டியும் தொந்தரவு செய்தும் வருவதாகக் குற்றம் சாட்டி, தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஊராட்சி மன்றத் தலைவர் அரிகிருஷ்ணன் JCB இயந்திரம் மூலம் தனது வீட்டின் முன்புற சிமெண்ட் தளத்தை இடித்ததாகவும், அதனை குறித்து கேள்வி எழுப்பியபோது தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.