மதுரை எல்ஐசி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து – பெண் கிளை மேலாளர் உயிரிழப்பு
மதுரை நகரில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பெண் கிளை மேலாளர் ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டாம் மாடியில் எல்ஐசி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் அலுவலகத்தில் தீப்பற்றியது. தீ வேகமாக பரவியதால், கட்டடத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
ஆனால், கல்யாணி நம்பி என்பவரான கிளை மேலாளர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.