திமுக ஆட்சியால் தமிழகம் ரூ.8 லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கியுள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திமுக அரசின் தவறான நிர்வாக நடைமுறைகளே தமிழ்நாட்டை ரூ.8 லட்சம் கோடி அளவிலான கடன் சுமைக்குள் தள்ளியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேலூரில் பாஜக சார்பில் நடைபெற்ற “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த கூட்டத்தில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நிகழ்வுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், நீதியை மதிக்காத திமுக அரசை வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதால் குற்றச்செயல்கள் பெருகி வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.