தாம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை – நோயாளிகள் அவதி
தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருவதால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த அரசு மருத்துவமனையில் தேவையான அளவு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சை பிரிவில் மருத்துவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.