சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரிய வகை கள்ளிசெடிகள்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரிய வகை கள்ளிசெடிகள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
அந்த பூங்காவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கள்ளிசெடி இல்லத்தில், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகை கள்ளிசெடிகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வடிவமைப்பிலும் தோற்றத்திலும் வித்தியாசமாக காணப்படும் இந்தக் கள்ளிசெடிகள், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த ஆர்வத்தை உருவாக்கி வருகின்றன.