1,000 ஆண்டுகள் பழமையான கோயில் கோபுர கலசம் திருட்டு – பரபரப்பு
கரூர் மாவட்டம் சங்கரமலப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கரேஸ்வரர் ஆலயத்தின் கோபுரத்தில் இருந்த கலசம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுப்பிப்பு மற்றும் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வந்த நேரத்தில், கோபுரத்தின் மேல் இருந்த கலசம் காணாமல் போனதை கோயில் பணியாளர்கள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதேபோல், ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள மற்றொரு கோயிலின் கோபுரக் கலசங்களையும் கொள்ளையர்கள் அகற்றியதாகவும், அதில் மதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லாததை அறிந்த பின்னர், அவற்றை கோயிலுக்கு அருகிலேயே வீசி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.