நெல்லை அருகே மாடு மோதியதால் வேன் புரண்டு விபத்து
நெல்லை கேடிசி நகர் மேம்பாலம் பகுதியில் நடந்த சாலை விபத்தில், வேன் கவிழ்ந்ததில் 25-க்கும் அதிகமான பெண்கள் கடுமையாக காயமடைந்தனர்.
சிவந்திபட்டியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பணியை முடித்துக் கொண்டு, 25-க்கும் மேற்பட்ட பெண்கள் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வேன், கேடிசி நகர் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென சாலையை கடந்த மாட்டின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக வேன் கட்டுப்பாட்டை இழந்து புரண்டது.
இந்த விபத்தில், வேனில் இருந்த பெண்கள் பலத்த காயங்களுக்குள்ளானனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
விபத்து காரணமாக கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.