தொடர்ந்து சென்ற வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 4 பேர் பலி
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ஏற்பட்ட தொடர் விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு லாரி, தருமபுரி மாவட்ட எல்லைக்குட்பட்ட தொப்பூர் கணவாய் புதூர்ப் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த லாரி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தையும், அதன் பின்னர் ஒரு காரையும் அடுத்தடுத்து மோதியது.
இந்த கோர விபத்தில் அருணகிரி, கலையரசி, முனியப்பன் மற்றும் தினேஷ் ஆகிய நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த நான்கு பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் சதீஷ், சம்பவ இடத்தை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.