புதுச்சேரியை சிங்கப்பூர், டென்மார்க் தரத்திற்கு உயர்த்துவேன் – ஜோஸ் சார்லஸ்
புதுச்சேரியை உலக தரமுள்ள நகரமாக உருவாக்கும் நோக்கில் லட்சிய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழா மற்றும் பொதுமக்கள் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அப்போது, சிங்கப்பூர் மற்றும் டென்மார்க் போன்ற முன்னேற்றமடைந்த நாடுகளுக்கு இணையாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்ற கனவுடன் செயல்படுவதாக அவர் கூறினார். அரசியல் லாபத்திற்காக அல்ல, பொதுமக்களின் நலன் மற்றும் சேவையை முதன்மை நோக்கமாகக் கொண்டு தான் இந்தக் கட்சியை ஆரம்பித்ததாகவும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் விளக்கினார்.