என்டிஏ கூட்டணியில் கூடுதல் கட்சிகள் சேர வாய்ப்பு
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக புதிய தேசிய செயல் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், என்டிஏ கூட்டணியில் கூடுதல் அரசியல் கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
பாஜக நடத்த உள்ள யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.