தமிழக பாஜக தேர்தல் பணிகளுக்கு பியூஷ் கோயல் பொறுப்பேற்பு
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நியமித்து, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், தமிழக பாஜக தேர்தல் நடவடிக்கைகளை வழிநடத்தும் பொறுப்பை பியூஷ் கோயலுக்கு வழங்கியுள்ள கட்சி தலைமை, அவருக்கு துணையாக மத்திய அமைச்சர்களான அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோரை இணை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மூன்று மத்திய அமைச்சர்களை ஒரே நேரத்தில் களமிறக்கியுள்ள பாஜக முடிவு, அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடத்தக்கதாகவும், கவனம் ஈர்க்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.