3I ATLAS வால் நட்சத்திரத்தின் நகர்வுகளை நுணுக்கமாக கண்காணிக்கும் நாசா
3I ATLAS எனப்படும் வால் நட்சத்திரத்தின் இயக்கங்களை மிகத் துல்லியமாக கண்காணித்து வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 1ஆம் தேதி, சிலி நாட்டில் அமைந்துள்ள ATLAS தொலைநோக்கி மூலம் இந்த வால் நட்சத்திரம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது.
இந்த 3I ATLAS, சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து வந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட மூன்றாவது விண்மீன் பொருளாகும். பூமி திசையை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதால், விஞ்ஞானிகள் அதன் பாதை, வேகம் மற்றும் திசை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் ஒவ்வொரு அசைவும் விண்வெளி ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நாசா தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.