90ஸ் கிட்ஸ்களின் ஐகான் ஜான் சீனா – WWE ரிங்குக்கு விடை

Date:

90ஸ் கிட்ஸ்களின் ஐகான் ஜான் சீனா – WWE ரிங்குக்கு விடை

மல்யுத்த உலகில் தனித்த அடையாளத்தை உருவாக்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜான் சீனா, WWE போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். அவரது இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. ஜான் சீனாவின் பயணம் குறித்த ஒரு பார்வை இதோ…

90களில் பிறந்தவர்களின் மறக்க முடியாத பொழுதுபோக்குகளில் முக்கிய இடம் பிடித்தது WWE (World Wrestling Entertainment). அண்டர்டேக்கர், பிக் ஷோ, ட்ரிப்பிள் ஹெச், எட்ஜ், ஜேபிஎல், எட்டி குரேரோ, ரே மிஸ்டீரியோ போன்ற பல நட்சத்திரங்கள் அந்தக் காலகட்டத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். இருப்பினும், அனைவரையும் சமமாகக் கவர்ந்த வீரர்கள் மிகக் குறைவே. அவர்களில் முதன்மையானவர் ஜான் சீனா.

“The Time Is Now” என்ற இசை ஒலிக்க, ஜான் சீனா ரிங்கில் நுழையும் தருணமே அரங்கமே அதிரத் தொடங்கும். 1977 ஏப்ரல் 23ஆம் தேதி அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த ஜான் சீனா, சிறுவயதிலிருந்தே தற்காப்புக் கலைகளில் ஆர்வம் காட்டினார். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங்கில் முழு கவனம் செலுத்தினார்.

அதே நேரத்தில் மல்யுத்தத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் கலிபோர்னியா சென்று கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். 2002ஆம் ஆண்டு “The Prototype” என்ற பெயரில் WWE ரிங்கில் அறிமுகமானார். பின்னர் “Doctor of Thuganomics” என்ற கதாபாத்திரத்தில், ஹிப்-ஹாப் ரேப்பராக தோன்றி, எதிரிகளைப் பற்றி ரேப் பாடல்களுடன் கிண்டல் செய்தார். இந்த பாணி அவரை ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக்கியது.

ராக், பாடிஸ்டா, ட்ரிப்பிள் ஹெச், பிக் ஷோ ஆகியோருடன் நடைபெற்ற போட்டிகள் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டவை. குறிப்பாக எட்ஜ், ராண்டி ஆர்டன், ஜேபிஎல் போன்ற தந்திரமான வீரர்களுக்கு எதிரான ஜான் சீனாவின் மோதல்கள் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவை.

“You Can’t See Me” என்ற அவரது பிரபலமான வசனம், எதிரியை வீழ்த்திய பிறகு அரங்கமே எதிரொலிக்கச் செய்த தருணங்கள் இன்றும் ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

மல்யுத்தத்தில் உச்சத்தை தொட்டபோதும், ஜான் சீனா ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்தார். The Marine, Trainwreck, Blockers, Bumblebee போன்ற திரைப்படங்களில் நடித்த அவர், மல்யுத்தத்தையும் சினிமாவையும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக கையாள்ந்தார்.

இந்த நிலையில், WWE-யில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். அதன்படி “Saturday Night’s Main Event” நிகழ்ச்சியில் அவரது கடைசி போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியை காண அரங்கம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர். எதிரணியில் குந்தர் ரிங்கில் நுழைந்தபோது ரசிகர்கள் கிண்டல் செய்ய, ஜான் சீனா நுழைந்த தருணம் முழு அரங்கமும் உற்சாகக் கோஷத்தால் அதிர்ந்தது.

போட்டி தொடங்கியதும், ஜான் சீனா தனது சிக்னேச்சர் மூவ்களை பயன்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், குந்தரின் கடுமையான எதிர்த்தாக்குதலை சமாளிக்க முடியாமல், Sleeper Hold பிடியில் சிக்கி ஜான் சீனா தனது கடைசி தோல்வியை சந்தித்தார். இந்தக் காட்சி ரசிகர்களை கண்கலங்க வைத்தது.

போட்டி முடிந்ததும் பல WWE வீரர்கள் ரிங்கில் வந்து ஜான் சீனாவுக்கு மரியாதை செலுத்தி வழியனுப்பினர். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜான் சீனா, கேமராவை நோக்கி வணக்கம் செலுத்தினார். அவரது பயணத்தை நினைவுகூரும் சிறப்பு காணொளியும் திரையிடப்பட்டது. இறுதியில், கண்ணீருடன் ரசிகர்கள் அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

இதனுடன், WWE வரலாற்றில் ஒரு பொன்னான சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஜான் சீனாவின் ஓய்வு, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை அச்சுறுத்துகிறது

புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை...

மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை

மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை சிவகங்கை...

நவோதயா பள்ளிகள் அமைப்பு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு

நவோதயா பள்ளிகள் அமைப்பு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு தமிழகத்தில்...