மக்களவையில் இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா தாக்கல்
மக்களவையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய உயர்கல்வி ஆணையம் தொடர்பான புதிய மசோதாவை அதிகாரப்பூர்வமாக முன்வைத்தார்.
இந்த சட்ட முன்மொழிவின் கீழ், தற்போதைய பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) ஆகிய அமைப்புகள் ரத்து செய்யப்படவுள்ளன. அவற்றின் பதிலாக, உயர்கல்வி நிர்வாகம் முழுமையாக இந்திய உயர்கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட உள்ளது.
இதன் மூலம் கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி வழங்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே மைய ஆணையத்தின் கீழ் செயல்படும் என விளக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை விரிவாக ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.