வக்பு சொத்துகள் ஆன்லைன் பதிவு: உத்தரபிரதேசம் முதலிடம்
மத்திய அரசால் உருவாக்கப்பட்ட உமீத் என்ற இணைய தளத்தில் வக்பு சொத்துகளை மின்னணு முறையில் பதிவு செய்வதில் உத்தரபிரதேச மாநிலம் நாட்டிலேயே முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
வெளியிடப்பட்ட தரவுகளின்படி, சன்னி வக்பு பிரிவில் 86,347 சொத்துகளும், ஷியா வக்பு பிரிவில் 6,485 சொத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் கணக்கிட்டால், ஷியா பிரிவில் 625 பதிவுகளுடன் லக்னோ மாவட்டம் முதன்மை இடத்தில் உள்ளது.
அதேபோல், சன்னி வக்பு பிரிவில் 4,940 சொத்துகள் பதிவாகி பாராபங்கி மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு உத்தரபிரதேச அரசு மொத்தமாக 92,832 வக்பு சொத்துகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.