லட்சத்தீவில் முதல்முறை முதலீட்டாளர் சந்திப்பு
மீன்வளத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வை மத்திய அரசின் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை, லட்சத்தீவு நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆர்வத்தையும் கருத்துகளையும் பகிர்ந்தனர்.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், இனிமேல் அங்கீகாரம் பெற்ற அனுமதிச் சீட்டு பெற்றவர்களே சட்டப்பூர்வமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியும் எனத் தெரிவித்தார்.