பிரேசில் : முன்னாள் அதிபரை ஆதரிக்கும் மசோதாவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
முன்னாள் அதிபர் ஜெயர் போல்சனாரோவுக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டுகள் சிறை தண்டனையைத் தளர்த்தும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதாவை எதிர்த்து, பிரேசில் முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மசோதா கீழவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி உருவாகியுள்ளது.
இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தலைநகர் பிரேசிலியா மட்டுமின்றி, ப்ளோரியானோபொலிஸ், சல்வடோர், ரெசிப் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.