தரைப்பாலம் சேதம் – சாலையை மூடிய வெள்ளப்பெருக்கு!
கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில் தரைப்பாலம் சேதமடைந்ததன் காரணமாக சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சுள்ளிமேட்டுப்பதி மற்றும் வெப்பறை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நீர், அங்குள்ள தரைப்பாலம் வழியாகச் சென்று ஆழியாற்றில் கலந்துவந்தது.
ஆனால், தரைப்பாலத்தில் ஏற்பட்ட பழுதால் நீர் செல்ல முடியாமல் அடைப்பு உருவாகி, சாலை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அப்பாதையில் பயணம் செய்யும் மக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பழுதடைந்த தரைப்பாலத்திற்கு பதிலாக புதிய தலைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.