கூகுள் தேடலில் முன்னிலை பெற்ற திரைப்படங்கள் பட்டியல் வெளியீடு!
2025ஆம் ஆண்டில் கூகுள் தளத்தில் அதிக அளவில் தேடப்பட்ட திரைப்படங்களைப் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் இந்திய அளவில் குறிப்பாக பாலிவுட் திரைப்படங்கள் அதிக கவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
வெளியிடப்பட்ட தகவலின்படி, சையாரா, காந்தாரா – முதல் பாகம், கூலி, வார் 2, சனம் தேரி கசம், மார்கோ, ஹவுஸ்புல் 5, கேம் சேஞ்சர், மிஸஸ், மகாவதார் நரசிம்மா ஆகிய திரைப்படங்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளன.