பிரதமரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் பாஜக – கே.பி.ராமலிங்கம்
தேர்தல்களை மட்டுமே மையமாகக் கொண்டு அரசியல் செய்யாமல், பொதுமக்களோடு ஒன்றிணைந்து சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவே பாஜக செயல்பட்டு வருகிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மருளைபாளையத்தில் பாஜக ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமை கே.பி.ராமலிங்கம் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், பொதுமக்களுக்கு இவ்வாறு மருத்துவ சேவைகளை வழங்க முன்வரும் மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றும், அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.