கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக!
கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்ட திமுக, எந்த ஒரு வார்டிலும் வெற்றி பெற முடியாமல் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்ட சில பகுதிகளில் மட்டும் திமுக போட்டியிட்டது.
அதில் குறிப்பாக எல்லை மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள உப்புதரா ஊராட்சியில் 9 வார்டுகளிலும், சின்னக்கானல் ஊராட்சியில் 3 வார்டுகளிலும், தேவிகுளம் மற்றும் மறையூர் ஊராட்சிகளில் தலா ஒரு வார்டிலும், மேலும் தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வார்டிலும் என மொத்தம் 15 இடங்களில் திமுக முதன்முறையாக வேட்பாளர்களை களமிறக்கியது.
அதேபோல் அதிமுகவும் 25 வார்டுகளில் போட்டியிட்ட நிலையில், இரு கட்சிகளும் எதிர்பார்ப்புகளை மீறி எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் தேர்தலில் இருந்து வெளியேறின.