முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கமப் பகுதியில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.
ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், கன்னியாகுமரியில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் பரபரப்புடன் காணப்பட்டன. அதிகாலை நேரத்தில் முக்கடல் சங்கமத்தில் தோன்றிய சூரிய உதயத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு உற்சாகமடைந்தனர்.
அந்த அழகிய தருணங்களை செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் அவற்றை இணைக்கும் கண்ணாடி நடைபாலத்தையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு ரசித்தனர்.
மேலும், ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர்.